வருடங்களுக்கு முன்னால் மனிதன் மற்ற மிருகங்களைப்போலத் தான் இருந்திருப்பான் - இருட்டென்றால் பயம், குகைகளில் வாழ்வது, பசித்தால் உணவை வேட்டையாடி உண்பது என்று வாழ்க்கை இருந்திருக்கும். நெருப்பு எப்படி பற்ற வைப்பது என்பதை ஏறக்குறைய 10 இலட்சம் வருடங்களுக்கு முன்னால் கண்டு பிடித்தான் - கதை மாதிரி கற்பனை செய்து பார்க்கலாம்!
( 'Red flower' in Jungle book ஞாபகம் வருதா? )
ஆனால், சக்கரம் அவன் கையில் அவ்வளவு எளிதாகச் சிக்காமல் உருண்டு கொண்டிருந்தது! கிட்ட தட்ட 5500 வருடங்களுக்கு முன்னால் சக்கரம் மனிதன் கைக்கு வந்தது! மிருகங்களோடு மிருகமாய் இருந்தவன் எப்படி யோசித்து சுழலும் சக்கரத்திற்கு அச்சு தேவை என்று அறிந்திருப்பான்?
ஆனால் அறிந்த பின்னாலோ , மனிதன் வாழ்க்கை வேக வேகமாக மாறத் தொடங்கியது! சக்கரம் இல்லையென்றால் ஒரு இயக்கமும் இல்லை!
எந்த வண்டி/எந்திரம் ஓடும் ? இந்தப் பாட்டி எப்படி ஊர் ஊராகச் சுற்றுவேன்!!
மண் பாண்டம் செய்யும் குயவர் தான் முதலில் சக்கரத்தை பயன் படுத்தி இருப்பார்கள்.
நீ அம்மாவுடைய சர்கா பார்த்திருக்காயா? இராட்டை என்று தமிழில் சொல்லுவோம்.யார் கையிலோ அது சுற்றுவதை நீ படங்களில் பார்த்திருப்பாய்! யார் அது?
வாசலில் போடும் கோலம் எத்தனையோ வடிவங்களில் இருக்கும். இரண்டு நாட்களாக , என் விரல்கள் வழியாக விழும் இழைகள் சுழன்று வட்டமாய் உருவெடுக்கின்றன! நீ பாரேன், சதுரமாக ஆரம்பித்தது வட்டத்தில் முடிந்து விட்டது! பக்கத்தில் சுதாப் பாட்டி கோலம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக