Music and me.

ரீங்கரிக்கும்  இரவுப் பூச்சிகளின் இடையறாத 'இம்' எனும் அடிநாதம் ஸ்ருதி போலவும், அவ்வப்போது வரும்  தவளையின் 'கிரிக்' ஓசை தாளம் ஆகவும் ஒரு கச்சேரி! நகரத்திற்கு உரிய எந்த சத்தமும் இங்கே இல்லை!
ஒரு மழை கால மாலை நேரம் . பறவைகள், மிருகங்கள் மட்டும் அவரவர் கூட்டுக்குள் அடையவில்லை - இரவுக்காக - மனிதரும் கூடத்தான்!
இயற்கையில் இரவுக்கான சத்தங்களைத் தவிர எதுவும் கேட்டதில்லை நான்.
ஆ...! இதுக்கு நடுவுலே குழலும், வயலினும் பின்னிப்போட்ட இசை  வலைக்குள் நான்!
லால்குடி ஜெயராமனும் ரமணியும்னா கேட்கவும் வேணுமோ!  திருச்சியில் வெளி  வெராண்டாவில் படுத்தபடியே அப்பா, அம்மாவுடன் கேட்ட ரேடியோ இசைவிழா ஒலிபரப்பும் சங்கீத சம்மேளனக்கச்சேரிகளோட   ஞாபகம் வருது!
ராகம் தானம் பல்லவி - ஆஹா! சிம்மேந்திர மத்தியமம் - சில் என்று பாறையில் வழுக்கி வளைந்து அசைந்து வரும் நீரோடை போல ராகங்களின் அணி வகுப்பு ! - கானடா, நீலாம்பரி , பௌளி, ஆஹிரி, இந்தோளம், தேஷ் !   

Do you have any questions?

  प्रश्नः,  प्रश्न , 'கேள்வி ,  ചോദ്യം (chodyam), 'Prashna' - ప్రశ్న, প্রশ্ন, प्रश्नः,  प्रश्न , ಪ್ರಶ್ನೆ( Praśne ), પ્રશ્ન, سوا...